News

நிந்தவூர் மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தில் முஸ்லிம் பயிலுனர்கள், உத்தியோகத்தர்கள் தொழுகைக்கு பள்ளிவாயல் செல்ல அனுமதி மறுப்பு

(எஸ்.அஷ்ரப்கான்)

நிந்தவூர் மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தில் முஸ்லிம் பயிலுனர்களையும் உத்தியோகத்தர்களையும் தொழுகைக்கு பள்ளிவாயல் செல்ல தடை விதித்தது மற்றும் பயிற்சி, ஏனைய நடவடிக்கைகள் சீரான முறையில் இயங்கவில்லை எனக் கூறி மாவட்ட பிரதிப் பணிப்பாளரின் இந்த நடைமுறையினை கண்டித்து, பயிலுனர்கள்
இன்று (09) நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குறிப்பிடும் போது,
கடந்த வியாழக்கிழமை 06.09.2024 நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில்
கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களாகிய எங்களை இங்கு தலைமைவகிக்கும்
ரீ.வினோதராஜா என்ற பிரதிப் பணிப்பாளர் ஜும்மா தொழுகைக்கு மற்றும் எந்த தொழுகைக்கும் செல்ல அனுமதிக்க முடியாது என காலைக்கூட்டத்தில் எங்களுக்கு அறிவித்து இங்கு கடமைபுரியும் சகோதர தமிழ் இனத்தைச் சேர்ந்த காவலாளி ஊடாக வெள்ளிகிழமையன்று (06.06.2024) ஜும்மா தொழுகைக்காக சென்றவேளை பிரதான நுழைவாயிலை மூடி தொழுக்காக செல்ல விடாமல் தடுத்ததன் காரணமாக முறுகல் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இங்கு கடமையாற்றும் முஹம்மட் நசீர் சேர் என்பவர் தலையிட்டு நுழைவாயிலை திறந்து எங்களை இறுதி நேரத்தில் தொழுகைக்கு செல்ல அனுமதி பெற்றுத்தந்தார்.

இவ்வாறான ஒரு நிர்வாகத்தின் கீழ் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட நிந்தவூரில் முஸ்லிம்களின் உரிமைகளில்
கைவைத்து தடை விதிக்கின்ற இவ்வாறான இனவாத செயற்பாடுகளை துடைத்தெறிந்து எமது உரிமைகள் பெற்றுத் தரப்பட வேண்டும்.

நாம் இதற்கு முன் பல இடங்களில் பயிற்சிகளை மேற்கொண்டிருக்கின்றோம். அங்கு ஜும்மா நேரத்திற்கு தொழுகைக்கு செல்லாவிட்டால் சகல முஸ்லிம் மாணவர்களையும் தொழுகைகாக விரட்டிவிடுவார்கள். அந்தளவிற்கு நல்ல மற்ற மதத்தை மதிக்கின்ற பண்பாடு ஏனைய இடங்களில் இருக்கின்ற நிலையில் இங்கு உரிமை மறுக்கப்படுகின்றது.

எனவே, நிந்தவூர் தொழுகைகுச் செல்ல வேண்டாமென்பது மன வேதனையைத் தருவதோடு,

நிந்தவூரின் உலமாக்கள், பத்திஜீவிகள், அரசியல்வாதிகள் மற்றும் ஊர்வாழ் மக்களாகிய அனைவரும் இவ்விடயத்தினை கவனத்தில் எடுத்து தீர்வினை பெற்றுத் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, குறித்த இடத்துக்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இந்த விடயமாக உரியவர்களிடம் பேசி தீர்வினை பெற்று தருவதாக வாக்குறுதி அளித்தனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button