இன்னும் எத்தனை உயிரை பலி எடுக்குமோ… ? கெரண்டி எல்ல பகுதியில் கவனமாக பயணிக்கவும்

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் வான் (Van) ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று (02) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை 1:00 மணியளவில் நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின், கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் ஏற்பட்டு்ளது.
விபத்தொன்றில் காயமடைந்த ஒருவரைப் பார்ப்பதற்காகச் சென்றுவிட்டு, மீண்டும் கொத்மலை தவலந்தென்ன நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் வாகனத்தின் உரிமையாளருமே இவ்வாறு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் டித்வா புயலின் போது பாரிய நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டதோடு பலர் காயமடைந்திருந்தனர்.
அத்துடன் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி கெரண்டி எல்ல ஆற்றில் நீராட சென்ற ராஜா டேவிட் குமார் (23) சிவ சுப்ரமணியம் காஞ்சனா (21) பவாணி (22) சிந்து (18) மற்றும் சிரியா (20) மற்றும் செல்வகுமார் சசிப்பிரியா ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
மேலும், கடந்த வருடம் மே மாதம் பகுதியில் கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சுமார் 22 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (கீழுள்ள படங்கள் )





