News

மிகவும் தாமதமாவதற்கு முன்பாக ஒப்பந்தம் செய்து விடுங்கள் – ஈரானுக்கு டிரம்ப் சற்றுமுன் அறிவிப்பு

ஈரான் “மிகவும் தாமதமாவதற்கு முன்பாக” ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


ஈரானின் மிகப்பெரிய பாலம் என்று அவர் குறிப்பிட்ட ஒன்று தாக்குதலில் தகர்க்கப்படுவதைக் காட்டும் வீடியோவை டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், ஈரான் “மிகவும் தாமதமாவதற்கு முன்பாக” ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான நேரம் இது என்று மீண்டும் ஒருமுறை அறிவித்துள்ளார்.
தெஹ்ரானை மேற்கு நகரமான கராஜுடன் இணைக்கும் நெடுஞ்சாலை பாலம் இன்று அதிகாலை வான்வழித் தாக்குதல்களால் தாக்கப்பட்டதாக ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானை மீண்டும் கற்காலத்திற்குத் தள்ளத் திட்டமிடுவதாக டிரம்ப் கூறிய கருத்துக்கு ஈரான் :-

“உங்கள் வீரர்களைக் கல்லறைகளுக்கு அழைத்துச் செல்வது நீங்கள்தான். நீங்கள் கற்காலத்திற்கு இழுத்துச் செல்ல முயல்வது ஈரானை அல்ல.

ஹாலிவுட் மாயைகள் உங்கள் மனதை மிகவும் நஞ்சாக்கிவிட்டன. அதனால், உங்கள் அற்பமான 250 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டு, 6,000 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு நாகரிகத்தையே நீங்கள் அச்சுறுத்துகிறீர்கள்.”

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button