News

இன்று ஜனாதிபதியின் செல்வாக்கு 62% சதவீதத்தைத் தாண்டியுள்ளது.

வரலாற்றில் முதல்முறையாக இரண்டாவது விருப்பு வாக்கின் மூலம் ஜனாதிபதியாகத் தெரிவானவர் அநுர திஸாநாயக்க – பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன

வரலாற்றில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலொன்றில் இரண்டாவது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு ஜனாதிபதியாகப் பதவியேற்றவர் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க என பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இன்று ஜனாதிபதியின் செல்வாக்கு 62% சதவீதத்தைத் தாண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த 14 மாத காலப்பகுதியில் ஜனாதிபதி முன்னெடுத்த வேலைத்திட்டங்களின் காரணமாகவே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button