கொழும்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் 14வது வருடாந்த மாநாடு வெற்றிகரமாக நிறைவு
![](wp-content/uploads/2024/09/IMG-20240909-WA0143-780x585.jpg)
இர்ஷாத் இமாமுதீன்
கொழும்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் 14வது வருடாந்த மாநாடு 2024 செப்டம்பர் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி, மாலை 6 மணியளவில் ,னிதே நிறைவுற்றது. இந்நிகழ்வு கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை, ஹில் காசல் பிளேஸ், காசல் கேட்போர் கூடத்தில் அமைதியாக நடைபெற்றது.
அஹதிய்யா பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெருமளவில் பங்குபற்றிய 14வது வருடாந்த மாநாட்டில், கனிசமான தொகையினர் பெண்கள் என்பதும் பாராட்டுதலுக்குரியதாகும்.
*புதிய நிர்வாகக் குழு தெரிவு*
மாநாட்டின் பிரதான நிகழ்வாக புதிய நிர்வாகக் குழு தெரிவு இடம்பெற்றது. அகில இலங்கை அஹதிய்யா சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.ஆர்.எம். ஸரூக் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த நிகழ்வில், சட்டத்தரணி எம். அஷ்ரப் ரூமி அவர்கள் கொழும்பு மாவட்ட அஹதிய்யா சம்மேளனத்தின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
*பதவி ஏற்றவர்கள்:*
உப தலைவர்: றிஸவான் அன்ஸார்
செயலாளர்: அஷ்ஷெய்க் முஹம்மத் பகீ{ஹத்தீன்
உப செயலாளர்: ,ர்ஷாத் பட்டேல்
பொருளாளர்: அல்ஹாஜ் அஸாத் ,ஷாக்
உப பொருளாளர்: எம்.ஏ. அப்துல்லாஹ்
கணக்காய்வாளர்: ஏ.எச்.எம். கஸ்ஸாலி
14வது வருடாந்த மாநாடு மாலை 6 மணியளவில் அiதியாக நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
தகவல்
செயலாளர்
கொழும்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனம்
![](wp-content/uploads/2024/09/img-20240909-wa01448379667556687403261-1024x768.jpg)
![](wp-content/uploads/2024/09/img-20240909-wa01454666193241582810747-1024x768.jpg)
![](wp-content/uploads/2024/09/img-20240909-wa01474807768983687582880-1024x768.jpg)
![](https://madawalaenews.com/wp-content/uploads/2024/07/wtsbanner.jpg)
![](https://madawalaenews.com/wp-content/uploads/2024/07/fbbanner.jpg)