News

மக்கள் அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படுபவர்களைத் தோற்கடித்து வெற்றியை நோக்கி முன்னேற வேண்டும்

ஜே.வி.பி-யின் கடந்த கால வீரர்களின் பொதுவான இலக்குகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றதாலேயே ஜனதா விமுக்தி பெரமுனவினால் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடிந்தது என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (5) நடைபெற்ற 55-வது ஏப்ரல் வீரர் நினைவு தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுவரை கடந்து வந்த கடினமான பயணத்தை எதிராளிகளின் தடைகளை முறியடித்து முன்னோக்கி கொண்டு செல்வதாகக் குறிப்பிட்ட டில்வின் சில்வா, மக்கள் அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படுபவர்களைத் தோற்கடித்து வெற்றியை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் கூறினார்.

ஜனதா விமுக்தி பெரமுன இம்முறை மூன்று ஏப்ரல் வீரர் நினைவு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வைத் தவிர, பதுளை மற்றும் மாத்தறையிலும் ஏப்ரல் வீரர் நினைவு தினங்கள் நடைபெற்றன. அங்கு ஏப்ரல் வீரர்களை நினைவுகூர்ந்து அமைக்கப்பட்ட நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியாவில் நடைபெற்ற வீரர் நினைவு நிகழ்வில் உரையாற்றிய டில்வின் சில்வா மேலும் கூறியதாவது:

“வட மாகாணத்தில் பிரதானமான ஏப்ரல் வீரர் நினைவு நிகழ்வொன்று நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் ஒன்றிணைந்து வவுனியாவில் இந்த நினைவு நிகழ்வை நடத்தும்போது அதில் ஒரு தனிச்சிறப்பு உள்ளது. 55 ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்ற மக்கள் எழுச்சியை நினைவுகூருவதற்காகவே நாம் இங்கு கூடியுள்ளோம்.

1971 போராட்டம் ஏன் உருவானது? அதில் உயிர்நீத்த தோழர்கள் எந்த நோக்கத்திற்காகப் போராடினார்கள்? ஜனதா விமுக்தி பெரமுனவின் ஆரம்பகாலத் தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அந்தச் சகோதர சகோதரிகள் ஒரு பொதுவான நோக்கத்திற்காகவே உயிர்நீத்தார்கள். அவர்கள் எமக்கு விமோசனத்தைப் பெற்றுத் தருவதற்காகவே போராடினார்கள்.”

Recent Articles

Back to top button