
அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடுவை எதிர்கொண்டுள்ள நிலையில், தன்னையும் சேர்த்து 14 மில்லியன் ஈரானியர்கள் போரில் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்ய முன்வந்துள்ளதாக ஈரான் ஜனாதிபதி இன்று (07) தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் மீதும் பாலங்கள் மீதும் தாக்குதல் நடத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், இன்றுடன் அக் காலக்கெடு நிறைவடைகிறது.
ஈரானில் 90 மில்லியன் மக்கள் வசிக்கின்ற நிலையில் அமெரிக்கா உறுதியளித்த குண்டுவீச்சுத் தாக்குதலைத் தடுக்கும் முயற்சியாகவே இந்த 14 மில்லியன் என்ற எண்ணிக்கை கூறப்பட்டிருக்கலாம்.
“14 மில்லியனுக்கும் அதிகமான ஈரானிய மக்கள் இந்த (தன்னலமற்ற) போராட்டத்தில் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர், “நானும் ஈரானுக்காக என் உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்தேன், இருக்கிறேன், இனியும் தயாராகவே இருப்பேன்.”


