News

ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறைமையினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் இன்று போராட்டம்

பல கோரிக்கைகளை முன்வைத்து நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் இன்று (06) காலை 9.30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.



எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டி.வி சாந்த சில்வா இதனை தெரிவித்துள்ளார்.



எரிபொருள் விநியோகத்தின் போது பின்பற்றப்படும் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளே இந்தப் போராட்டத்திற்கான பிரதான காரணம்.



இந்த முறைமையினால் ஊழியர்கள் கடுமையாக அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.



எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் 6ம% இலாபத்தைப் பெற்றுக்கொள்கின்றன.



எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 3% இலாபப் பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற போதிலும், கூட்டுத்தாபனத்தின் புதிய நிர்வாகத்தினால் அது தடுக்கப்பட்டுள்ளது.



அத்துடன், முன்பதிவு செய்யப்பட்ட டீசல் மற்றும் பெற்றோல் முறையாக வழங்கப்படாததால், எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடத்திச் செல்வதில் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.



இந்த விடயங்களை முன்னிறுத்தி இன்று போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டி.வி சாந்த சில்வா தெரிவித்துள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button