News
எதிரி நாடுகளுக்கு மட்டுமே ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது – எமது அனுமதியுடன் கடந்த 24 மணித்தியாலத்தில் 15 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்துள்ளன

ஈரானின் அனுமதியுடன் 15 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்றதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
போர் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட, இவ் வழியான போக்குவரத்து இன்றும் 90% குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட சில ஈரானிய அதிகாரிகள், இந்த முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதை மூடப்படவில்லை என்றும் அது எதிரி நாடுகளுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது என்றும் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர்.



