News

#நைஜிரியா ஈஸ்டர் தாக்குதலில் 30 க்கும் மேற்பட்டேர் பலி !

வட நைஜீரியாவில் ஈஸ்டர் வார இறுதியில் நடத்தப்பட்ட மூன்று வெவ்வேறு தாக்குதல்களில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாக நைஜீரிய ராணுவம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் தெரிவித்துள்ளனர்.

பெனுவே (Benue), கடூனா (Kaduna) மற்றும் நசராவா (Nasarawa) மாநிலங்களில் உள்ள பல சமூகங்களில் கொலைகள், கடத்தல்கள் மற்றும் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெனுவே மாநிலத் தாக்குதல்கள்

ஈஸ்டர் ஞாயிறு அதிகாலையில், பெனுவே மாநிலத்தின் குவெர் ஈஸ்ட் (Gwer East) பகுதியில் உள்ள எம்பாலோம் (Mbalom) சமூகத்தில் குறைந்தது 17 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். விடியற்காலையில் கிராமத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள், பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் வீடுகளுக்குத் தீ வைத்தனர். எம்பாலோம் பகுதி ஏற்கனவே இத்தகைய வன்முறைகளைச் சந்தித்துள்ளது; 2018 ஏப்ரலில் இரண்டு பாதிரியார்கள் உட்பட 19 கத்தோலிக்க வழிபாட்டாளர்கள் இதே பகுதியில் கொல்லப்பட்டனர்.

கடூனா மாநிலத் தாக்குதல்கள்

கடூனா மாநிலத்தின் அரிகோ (Ariko) பகுதியில், ஞாயிறு அதிகாலையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தினர். முதலில் ‘எவாஞ்சலிகல் சர்ச் வின்னிங் ஆல்’ (ECWA) தேவாலயத்தைத் தாக்கிய அவர்கள், பின்னர் அருகிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்குச் சென்றனர்.

அரிகோவில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் கடத்தப்பட்டதாகவும் உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவத்தினர் பின்னர் அங்கு வந்து 31 பிணைக் கைதிகளை மீட்டனர். கஜுரு (Kajuru) பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஒட்டுமொத்தமாக தெற்கு கடூனாவில் ஈஸ்டர் வழிபாட்டின் போது மட்டும் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நசராவா மாநிலத் தாக்குதல்கள்

அண்டை மாநிலமான நசராவாவில் உள்ள உடேகே (Udege) பகுதியில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், பல வீடுகள் இடிக்கப்பட்டன. கிதான்-ஒகிரி (Gidan-Ogiri), அகியேவா பக்கா (Akyewa Baka) மற்றும் உடேகே-காசா (Udege-Kasa) ஆகிய கிராமங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

Recent Articles

Back to top button