News

சஜித் பிரேமதாசாவோடு நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக பேசி ஒப்பந்தம் செய்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கின்ற ஒரு முடிவுக்கு பிறகு தான் நாங்கள் அவரை ஆதரிக்கின்றோம் ; ஹரீஸ் எம். பி அறிவிப்பு

இன்று தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாக, சந்தோஷமாக வாழவேண்டி பொருத்தமான ஒருவரை தேடுகின்றார்கள். – ஹரீஸ் எம்.பி

நூருல் ஹுதா உமர்

சிங்கள மக்கள் ரணிலுக்கு வாக்கு போட மாட்டோம் என்று முடிவெடுத்து விட்டார்கள். தென்பகுதியில் நடைபெற வேண்டிய கூட்டங்களை ரணில் விக்கிரமசிங்க தரப்பினர் ரத்து செய்து விட்டார்கள். அடுத்து அநுரகுமார. இந்த நாடு பொருளாதார நிலையில் சிக்குண்டிருக்கும் வேளையில் வெளிநாடுகள் உதவிக்கு வர வேண்டும். எமக்கு ஆதரவு வழங்க வேண்டும். எனவே வெளிநாட்டு தொடர்புகள் இல்லாத ஒருவர் தான் அனுரகுமார. அவர் நமக்கு வேண்டாம். இந்த நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். பிள்ளைகளுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்க வேண்டும். நாட்டை நல்ல நிலையில் கொண்டு செல்ல வேண்டும். ஆகவே தான் இப்படிப்பட்ட ஒரு தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாசவினை நாம் ஆதரிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

“வெல்லும் சஜித்” தேர்தல் பரப்புரை கூட்டமொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் சாய்ந்தமருதில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற போது அங்கு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,

சஜித் பிரேமதாசாவோடு நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக பேசி ஒப்பந்தம் செய்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கின்ற ஒரு முடிவுக்கு பிறகு தான் நாங்கள் அவரை ஆதரிக்கின்றோம். ஒரு ஜனாதிபதியின் மகனாகவும், ஆறு வருடங்கள் வீடமைப்பு அமைச்சராகவும் இருந்திருக்கின்றார். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றார். அவர் ஜனாதிபதியானால் இந்த நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்கு பல நாடுகளுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

சாய்ந்தமருது, கல்முனை, சம்மாந்துறை போன்ற ஊர் மக்கள் வாக்களிக்கின்ற வாக்குகள் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்க முடியாது. கண்டி கம்பஹா களுத்துறை கொழும்பு போன்ற இடங்களில் இருக்கின்ற மக்கள் தான் இவருக்கு வாக்களிக்க வேண்டும். சிங்கள மக்களும் செல்கின்றார்கள் இவருக்கு வாக்களிக்க மாட்டோம் என்று காரணம் இவருடன் இருப்பவர்கள் சரியில்லாதவர்கள் என்று. மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் ஒரு ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகாவை வெல்ல வைத்தார். சென்ற முறை மைத்திரியை நாங்கள் வெல்ல வைத்தோம். கடந்த முறை சிங்கள மக்கள் ஒன்றிணைந்து கொடுங்கோள் ஆட்சிக் காரனை ஆட்சி கதிரையில் அமர்த்தினார்கள். ஆனால் இன்று தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாக, சந்தோஷமாக வாழவேண்டி பொருத்தமான ஒருவரை தேடுகின்றார்கள்.

எதிர் வருகின்ற ஜனாதிபதி தேர்தல் என்பது மிக முக்கியமானது. இதுதான் இந்த நாட்டினுடைய ஆட்சியை மாற்றப் போவது. இந்த நாட்டில் கம்யூனிச கட்சியாக ஜேவிபி உருவானது. 1989 ஆம் ஆண்டு இந்த நாட்டில் அப்பாவி சிங்களவர்கள் இவர்களின் செயலால் உயிரிழந்தார்கள். அந்த நேரம் இருந்த ஜேவிபி இப்போது தேசிய மக்கள் சக்தியாக மாறி இருக்கின்றது. இந்த நாட்டில் ரணிலுக்கு ஏன் வாக்களிக்க கூடாது என்றால் இந்த நாட்டில் அரகலயே இருந்த போது இந்த நாட்டை பொறுப்பெடுத்து பல வேலைகள் செய்தாலும் இதனை நெருக்கடிக்கு காரணமாக இருந்த அமைச்சர்களுடன் ரணில் ஒட்டிக் கொண்டிருக்கின்றனர். ரணில் விக்ரமசிங்க இவ்வளவு எம்.பிமாரையும் வைத்துக்கொண்டு ஜனாதிபதியாகலாம் என நம்பிக்கொண்டிருக்கின்றார்.- என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button