இஸ்ரேலின் வலையில் மாட்டிக்கொண்ட ட்ரம்ப்பின் மனைவி

✍️ முகிந்தன் துரைராஜசிங்கம் மத்திய கிழக்கில் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு அமைதியான சூழல் நிலவுகின்றது.
டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்த அந்த இரண்டு வார போர்நிறுத்தம் (Ceasefire), உலக நாடுகளுக்கு ஒரு நம்பிக்கையைத் தந்தது.
ஆனால், இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட்டின் (Mossad) தலைமையகத்தில் அந்த அமைதி ஒரு முள்ளாகக் குத்தியது.
அமெரிக்காவை வைத்து ஈரானை முழுமையாக நிர்மூலம் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் இலக்காக இருந்தது.
ட்ரம்ப் போர்நிறுத்தத்தை நீட்டிக்க முயன்றபோது, நியூயார்க் டைம்ஸின் மூத்த நிருபரும், நீண்டகாலமாக இஸ்ரேலிய ஆதரவு வட்டாரத்தில் இருப்பவருமான மைக்கேல் வுல்ஃப் (Michael Wolff) ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
ட்ரம்பின் தற்போதைய மனைவி Melaniaவை ட்ரம்புக்கு அறிமுகப் படுத்தியதே பிரபல பெண்கள் புரோக்கர் Jeffrey Epstein தான்” என்ற உண்மையே அந்த குண்டு.
அவர் வெளியிட்ட தகவல்கள் ட்ரம்பின் உலகை ஒரு உலக்கு உலுக்கியது.
மெலனியா ட்ரம்ப் எப்ஸ்டீனின் வட்டத்தில் பணக்கார்ர்களுக்கு விருந்தளிக்கும் மொடலாக இருந்ததார் என்றும்,
கிஸ்லேன் மேக்ஸ்வெல் (Ghislaine Maxwell) மூலம் மெலனியா உயர்மட்ட நபர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார் என்றும்,
அவர் ஒரு காலத்தில் ‘High-class’ எலைட் வட்டத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது என்பது தான் அந்த தகவல்கள்.
“இந்தத் தகவல்கள் வெளியே வந்தால் உங்கள் குடும்பம் சிதறிவிடும்,” என்று மிரட்டல் விடுக்கப்பட்டது. ஈரானின் மீதான தாக்குதலைத் தொடரவில்லை என்றால், மெலனியாவின் கடந்த காலத்தை உலகறியச் செய்வோம் என்பதே அவர்களின் நிபந்தனை.
இதைத் தொடர்ந்து மெலனியா ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து அவசரவசரமாக ஒரு அரிதான அறிக்கையை வெளியிட்டார்: “நான் எப்ஸ்டீனின் விமானத்தில் சென்றதில்லை, அவரது தீவுக்குச் சென்றதே இல்லை. அவரது குற்றங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.”
ஆனால், அவர் இந்த அறிக்கையை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே, FBI (Federal Bureau of Investigation) வெளியிட்ட புதிய ஆவணங்கள் உலகையே அதிரவைத்தன:
2002-ஆம் ஆண்டு மெலனியா, கிஸ்லேன் மேக்ஸ்வெல்லுக்கு எழுதிய ஒரு மின்னஞ்சலில் எப்ஸ்டீனைப் புகழ்ந்து பேசியதோடு, இறுதியில் “அன்புடன், மெலனியா” (Love, Melania) என்று கையெழுத்திட்டுள்ளார்.
எப்ஸ்டீன் தான் முதன்முதலில் மெலனியாவை டொனால்ட் ட்ரம்பிற்கு அறிமுகம் செய்து வைத்ததாக ஒரு சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
நியூயார்க் டைம்ஸின் நிருபரும், இஸ்ரேலிய ஆதரவாளருமான Micheal Wolff இந்த ஆதாரங்களை வைத்து ட்ரம்பை மிரட்டத் தொடங்கினார்.
ஈரானை அழிக்கும் திட்டத்தை ட்ரம்ப் கைவிட்டால், மெலனியா ஒரு காலத்தில் கிஸ்லேன் மேக்ஸ்வெல்லால் Elite வர்க்கத்திற்காகத் தயார் செய்யப்பட்டவர் என்ற உண்மையை ஆதாரங்களுடன் வெளியிடப்போவதாக மொசாட் Wolff ஊடாக எச்சரித்தது.
பத்திரிகையாளர் Micheal Wolff, மெலனியாவின் கடந்த காலத்தை தோண்டி எடுத்ததுமே, மெலனியா சும்மா இருக்கவில்லை. Wolff மீது £790 மில்லியன் ($1 பில்லியன்) நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தார்.
ஆனால், இந்த மிரட்டலுக்கு Wolff பணியவில்லை. மாறாக, அவர் தொடுத்த பதில் மனு (Countersue) வெள்ளை மாளிகையின் தூண்களை அசைத்துள்ளது.
மைக்கேல் Wolff முன்வைக்கும் அதிரடி வாதங்கள்:
“தனது வழக்கறிஞர்கள் முன்னிலையில் அமர்ந்து, எப்ஸ்டீன் பற்றிய கேள்விகளுக்கு மெலனியா பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். அதைத் தடுக்க அவரது வழக்கறிஞர்கள் எவ்வளவோ முயல்கிறார்கள், ஆனால் உண்மை தப்ப முடியாது,” என Wolff சவால் விடுகிறார்.
ஒருவேளை இந்த விசாரணை பொதுவெளியில் நடந்தால், 1990-களில் நியூயார்க்கின் உயர்மட்ட வட்டாரங்களில் மெலனியா எப்படி அறிமுகமானார், கிஸ்லேன் மேக்ஸ்வெல் அவருக்குச் செய்த உதவிகள் என்ன என்ற “அசௌகரியமான உண்மைகள்” வெளியாகும் என Wolff எச்சரிக்கிறார்.
இஸ்ரேலிய ஆதரவு வட்டாரங்கள் ட்ரம்பிற்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பிவிட்டன:
“நீ ஈரானை அழிக்கவில்லை என்றால், Wolff கையில் இருக்கும் ஆதாரங்கள் நீதிமன்றத்திற்குச் செல்லும். மெலனியா விசாரணைக் கூண்டில் ஏறுவதைத் தவிர்க்க முடியாது. எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள உன்னுடைய அந்தரங்கங்களும், மெலனியாவின் கடந்த காலமும் சந்தி சிரிக்க நேரிடும்.”
தன் மனைவியின் கௌரவம் மற்றும் $1 பில்லியன் மற்றும் நற்பெயரைக் காப்பாற்ற, ட்ரம்ப் தனது போர்நிறுத்தக் கொள்கையிலிருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
வெள்ளை மாளிகை பணியாளர்களும், வழக்கறிஞர்களும் இந்த வழக்கின் தீவிரத்தை உணர்ந்து அதிர்ச்சியில் உள்ளனர்.
Wolff கூறியது போல, ஒரு பொது விசாரணை நடந்தால், அது ட்ரம்ப் குடும்பத்தின் அரசியல் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.
தனிப்பட்ட ரகசியங்களைக் காக்க ஒரு நாட்டின் அதிபர், மற்றொரு நாட்டின் மீது போர் தொடுக்கத் துணியும் அவலத்தை உலகம் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறது.
மெலனியா தனக்கு “எதுவும் தெரியாது” என மறுத்தாலும், FBI-ன் ‘Love, Melania’ மின்னஞ்சல்கள் அவரைத் துரத்துகின்றன.
ஒரு பெண்ணின் கடந்த காலத்தை வைத்து, ஒரு வல்லரசு நாட்டின் அதிபரையே இஸ்ரேல் தனது கைக்குள் வைத்திருப்பது இஸ்ரேலின் மொசாட் எவ்வளவு கொடூரமானது என்பதனை பறைசாற்றியுள்ளது.
ட்ரம்ப் இப்போது இருதலைக் கொள்ளி எறும்பாக மாறியுள்ளார்:
மெலனியாவின் கடந்த கால ரகசியங்கள் வெளியானால், அது அவரது குடும்பத்தையும் அதிபர் பதவியையும் சிதைத்துவிடும்.
இஸ்ரேலின் பிடிவாதத்திற்குப் பணிந்து ஈரானைத் தாக்கினால், அது ஒரு மாபெரும் உலக அழிவிற்கு வழிவகுக்கும்.
குடும்பமா? உலகமா? என்ற குழப்பத்தில் ட்ரம்ப்.
ஆனால் மெலனியா எதை மறைக்கப் பார்க்கிறார்? ஏன் இப்போது திடீரென்று இவ்வளவு தீவிரமாகத் தன்னைத் தற்காத்துக் கொள்கிறார்?
Epstein files இருக்கும் ட்ரம்பின் பெயரும், மெலனியாவின் கடந்த காலமும் இன்று உலக அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாறிவிட்டன.
தன் மனைவியின் ரகசியங்களைக் காக்க, ஒரு நாட்டை அழிக்கும் முடிவை நோக்கி ட்ரம்ப் தள்ளப்படுகிறார். சபலங்களால் விளைந்த பாவங்கள், இன்று உலக அமைதியையே காவு வாங்கத் துடிக்கின்றன.
ஒரு காலத்தில் எப்ஸ்டீனின் விருந்துகளில் தொடங்கிய சிறிய “சபலம்”, இன்று ஈரானின் வீதிகளில் ஏவுகணைகளாக விழ்ந்து வெடிக்கத் தயாராகிறது.
ஒரு மனிதனின் தனிப்பட்ட பலவீனங்கள், இன்று கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன.
மெலனியாவின் பிடிவாதம், ட்ரம்பின் கடந்த காலம், இஸ்ரேலின் தந்திரம் – இவை மூன்றும் இணைந்து உலகை ஒரு மாபெரும் அழிவை நோக்கி இழுத்துச் செல்கின்றன.



