News

அடுத்த தேர்தல் வியூகங்களை வலுப்படுத்தும் நோக்கில் கபீர் ஹாசிம், ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக, கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.



கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.



இதன்போது, அவருக்கான நியமன கடிதமும் வழங்கி வைக்கப்பட்டது.



ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இந்த நிகழ்வில் பங்கேற்றினார்.



கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் அடுத்த தேர்தல் வியூகங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button