Ramadan health Challenge போட்டிக்கான விருது வழங்கல் நிகழ்வு

Ramadan health Challenge போட்டிக்கான விருது வழங்கல் நிகழ்வு
கொழும்பு 10 இல் அமைந்துள்ள Oberon கட்டிடத்தில், சமூக மருத்துவ நிபுணர் Dr Irshad Mashood தலைமையில், NCD (Non-Communicable Diseases) தடுப்பு தொடர்பான Journal Club நிகழ்வும், Ramadan Health Challenge போட்டி வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (12) சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வை MIRT (பன்முகத் துறை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) ஏற்பாடு செய்திருந்தது. ஆராய்ச்சி பண்பாட்டை வலுப்படுத்துதல் மற்றும் சமூக அடிப்படையிலான சுகாதார முயற்சிகளை மேற்கொண்டவர்களை பாராட்டி கௌரவிப்பதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாகும்.
நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு, ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமூக முன்னேற்றம் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
முதலாவது அமர்வில், Dr Irshad Mashood அவர்கள் தனது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்து, NCD தடுப்பு நடவடிக்கைகளின் அவசியத்தையும் அதன் சமூக முக்கியத்துவத்தையும் விளக்கினார். அதனைத் தொடர்ந்து, ஆய்வுக் கட்டுரைக்கு விமர்சனங்களை
Dr Mizaya Cader (தேசிய காசநோய் திட்டம், சுகாதார அமைச்சு),
Dr Zacky Haniffa,
Dr M G M Mafaz
ஆகியோர் வழங்கினர்.
நிகழ்வின் பிரதான உரையை “சமூக சந்தைப்படுத்தல் மற்றும் சமூக இயக்கம்” என்ற தலைப்பில், இளம் தொழிலதிபரும் தொழில் வழிகாட்டல் ஆலோசகரும் சமூக செயற்பாட்டாளருமான Ihsan Wahid வழங்கினார்.
இதனுடன் இணைந்து நடத்தப்பட்ட “Ramadan Health Challenge” என்ற சமூக அடிப்படையிலான சுகாதார சவால் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, முறையே ரூ.100,000, ரூ.50,000 மற்றும் ரூ.30,000 பெறுமதியுள்ள பணப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மொத்தம் 400 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில், நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். இவர்களில் காத்தான்குடி, வரக்காப்பொல, ராஜகிரிய மற்றும் கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றனர்.
MIRT நிறுவனம், விரிவான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி முன்னெடுப்புகள் மூலம் சமூகத்தின் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய மையமாக உருவெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.



