ஈரான் மற்றும் லெபனானில் தாக்குதல்களைத் தொடருவதற்கான திட்டங்களை இஸ்ரேலின் தலைமை இராணுவ தளபதி அறிவித்தார்

லெபனான் மற்றும் ஈரானில் தாக்குதல்களைத் தொடருவதற்கான திட்டங்களை இஸ்ரேலின் தலைமைத் தளபதி அறிவித்துள்ளார்.
இஸ்ரேலிய ராணுவத் தளபதி இயல் ஜமீர், “லெபனான் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளிலும் தாக்குதலைத் தொடருவதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்று மேலும் தெரிவித்தார் .
அமெரிக்காவுடன் இணைந்து ஈரானை “கடுமையாகத் தாக்கி, அவர்களின் பாதுகாப்புத் திறன்களை அழித்து, அவர்களை பலவீனப்படுத்தியுள்ளதாக” இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.
“இப்போது அணுசக்தி விவகாரம், ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் இதர விஷயங்களில் அவர்களை எந்தவொரு சாதனையும் அடைய நாம் அனுமதிக்கக் கூடாது,” என்று அவர் மேலும் கூறினார்.
“உடனடியான சக்திவாய்ந்த தாக்குதலின் மூலம் அவர்களை எவ்வாறு நிலைகுலையச் செய்வது என்பது எங்களுக்குத் தெரியும்.”
லெபனான் குறித்துப் பேசிய ஜமீர், நாட்டின் தெற்குப் பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதாகக் கூறினார். “நாங்கள் முக்கியமான பகுதிகளைக் கைப்பற்றிச் சுத்தப்படுத்தி வருகிறோம், மேலும் வடக்குக் குடியிருப்புகளுக்கான அச்சுறுத்தல்களை அகற்றி வருகிறோம்.”



