News
23 வயது ரஷ்ய பெண் இன்று முற்பகல் கடுகதி ரயிலுடன் மோதி உயிரிழப்பு

கடுகதி ரயிலுடன் மோதி 23 வயது ரஷ்ய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
அஹங்கம, கபலான புகையிரதக் கடவையில் இன்று (19) முற்பகல் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
மின்சார மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, பெலியத்தையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்றவேளை புகையிரதக் கடவையின் சமிக்ஞை விளக்குகள் இயங்கிய நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



