News

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் தயாராகி வருவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை என உதவி பொலிஸ் அத்தியட்சகர் விளக்கம்

கொழும்பு உள்ளிட்ட சனநெரிசலான பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் தயாராகி வருவதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என்பதை அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.

எவ்வாறாயினும், ‘கஞ்சிப்பானை இம்ரான்’ என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button