News

சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாசவுக்கு, விமானப்படை வீரர்களால் ஆயுத வணக்கம் செலுத்தப்பட்டதா? சர்ச்சை வீடியோ தொடர்பில் விளக்கம் வழங்கப்பட்டது.

பலாலியில் உள்ள விமானப்படை முகாமிற்குள் நுழையும் போது, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாசவுக்கு, விமானப்படை வீரர்களால் நேற்று (10) ஆயுத வணக்கம் செலுத்தியதாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுத வணக்கம், துப்பாக்கி செங்குத்தாக உடலுக்கு ஏற்ப உயர்த்தப்பட்டு பொதுவாக நாட்டுத் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கப்படுவதாகும்.

விமானப்படையின் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கீகனகேவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஜலனி பிரேமதாசவுடன் சென்ற குழுவில் இருந்த எம்.பி ஜி.எல்.பீரிசுக்காகவே தற்போது ஆயுத வணக்கம் நிகழ்த்தப்பட்டது என்றும் வேறு எந்த நபருக்கும் அல்ல என்றார்.

எவ்வாறாயினும், குழுவிற்கு ஜலனி பிரேமதாச தலைமை தாங்கினார் என்பதும் அவருக்குப் பின்னால் ஜி.எல் நடந்து செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது, அதன் பின்னர் பலாலி முகாமில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜலனிக்கு சால்வை போர்த்தப்பட்டு வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்த காணொளி முதலில் வடமாகாண ஐக்கிய மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் உமாச்சந்திர பிரகாஷினால் Facebook இல் பதிவேற்றம் செய்யப்பட்டது ஆனால் நேற்று மாலை உமாச்சந்திரா முகாமிற்குள் நுழைந்த குழுவினருக்கு வணக்கம் செலுத்தப்பட்ட பகுதியை வெட்டி முகநூலில் தனது காணொளியை எடிட் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வீடியோ பார்க்க – https://www.facebook.com/share/v/E4EWDuyaTgUn5heD/?mibextid=D5vuiz

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button