News
தமிழக சட்டமன்ற தேர்தலில் 1.00 மணி நிலவரப்படி 56.81 சதவீதம் வாக்குகள் பதிவாகியது – 2021 தேர்தலுடன் ஒப்பிடும் போது பாரிய அளவில் அதிகரிப்பு

நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளநிலையில், மாலை 6.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பிற்பகல் 1.00 மணி நிலவரப்படி 56.81 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
முன்னதாக 2021 ம் ஆண்டு நடந்த தேர்தலில் 39.61 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. (வித்தியாசம் : 16 சதவீதம்)



