News
‘தயவுசெய்து அடிக்காதீர்கள்’ ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள சமிக்ஞை விளக்கு ஒன்றின் மீது ஏறிய நபர் பொலிஸாரிடம் கெஞ்சல்

கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள போக்குவரத்து சமிக்ஞை விளக்கு ஒன்றின் மீது ஏறிய நபர் ஒருவர், இன்று காலை பொலிஸாராலும் தீயணைப்புப் படையினராலும் மீட்கப்பட்டார்.
காணொளி காட்சிகளின்படி, அந்த நபர் தொங்கிக்கொண்டிருந்த துணி திடீரென அறுந்து விழுந்த போதிலும், தீயணைப்புப் படையினரால் போக்குவரத்து சமிக்ஞை விளக்கிற்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த ஊதப்பட்ட மீட்பு மெத்தையின் (Inflatable Rescue Cushion) மீது அவர் பாதுகாப்பாக விழுந்தார்.
‘தயவுசெய்து அடிக்காதீர்கள்’ என அந்த நபர் கெஞ்சியபோது, பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவருக்கு நம்பிக்கையளித்து, பின்னர் அவரை அந்த இடத்திலிருந்து அழைத்துச் சென்றனர்.



