News

தர்பூசணி துண்டுக்கு அக்கப்போரு .. கண்டி ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட அடிதடி – பொருட்களும் சேதம் , பொருட்கள் நீச்சல் தடாகத்தில் வீசப்பட்டன

கண்டி ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தவர்கள், தர்பூசணி துண்டு ஒன்றை அருகில் இருந்த தோட்டம் ஒன்றிற்குள் வீசியதால் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியை சேர்ந்த குழுவினர் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தியதுடன் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான முறைப்பாட்டை ஹோட்டல் முகாமையாளர் கண்டி பொலிஸில் பதிவு செய்துள்ளார்.


ஹோட்டலுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் வசிப்பவர்கள், இரண்டு வாகனங்களில் வந்து ஹோட்டலின் பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கியுள்ளனர்.

அத்துடன், ஹோட்டல் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டத்தில் தவறுதலாக தர்பூசணித் துண்டு விழுந்ததைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், இது தொடர்பாக பொலிஸார் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


சம்பவம் தொடர்பாக சந்தேகநபரை அடையாளம் கண்டு, அவர் பயன்படுத்திய வாகன இலக்கங்களையும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஹோட்டல் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

இது குறித்து கண்டி தலைமையக பொலிஸார் தகவல் வெளியிடுகையில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் குறித்த வர்த்தகர் தற்போது கண்டி பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button