அவுஸ்திரேலியாவுக்கு மீளச் செலுத்திய 2.5 Million USD பணம் Hackers ஊடாக வேறு கணக்குகளுக்கு சென்றது என்பது அலட்சியத்தின் உச்சம்

திறைசேரி நிதி மோசடியானது வெறும் Hackers கைவரிசை என்று கடந்து சென்றுவிட முடியாது. நமது கல்வித் திட்டத்தில் உள்ள மிகப் பெரிய ஓட்டையை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.
என்னதான் படித்து பட்டதாரி ஆகி ஒரு துறையில் நிபுணராக இருந்தாலும் பலரின் நிலைமை அடிப்படை Common Sense, Basic Information Technology இல் அடிமட்டத்திலேயே (பல படித்த நிபுணர்களும்) இருப்பார்கள்.
அதற்கு சிறந்த உதாரணம் பல பிரபலமானவர்களின் WhatsApp Hack செய்யப்படுவதை விசாரித்தாலே விளங்கும்.
Zoom Meetingஇல் இணைய OTPஐ அனுப்புங்கள் என்றதும் என்ன ஏது என்று புரியாமல் வெள்ளாந்தியாக நடந்து கொள்வார்கள்.
பல படித்தவர்களுக்கே இன்றும் email, User accounts Create பண்ண சொன்னாலே திணறுவார்கள்.
ATM Cardஇன் PIN Numberஐ எழுதி அந்த Card உடனே வைத்திருப்பர்.
Smart Phoneஇல் அடிப்படை Safety & Security விடயங்களை கையாளுதல், கணனியில் தரவுகளை பாதுகாப்பாக சேமித்தல் பொன்ற விடயங்களில் அடிப்படை அறிவின்றியே காணப்படுவர்.
அரசாங்க அலுவலக கணனி Passwordஐ Key Boardஇலோ Screenஇலோ எழுதி ஒட்டி வைக்கும் வெள்ளாந்தி தனத்தை என்னவென்பது.
ஒரு கல்வித்துறையில் நுழைந்தால் அந்த துறையில் PhD வரை சென்றாலும் அடுத்த பொதுவான விடயங்களை நோக்கும்போது அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருக்கும். இத்தகையவர்கள் Social Mediaக்களில் என்ன ஏது என்று ஒரு Basic Common Sense இல்லாமல் Share பண்ணும் விடயங்களை பார்க்கும்போது அழுவதா? சிரிப்பதா? என்பதுபோல் இருக்கும்.
நிதி விடயங்கள் என்பவை எவ்வளவு கவனமாக கையாளப்பட வேண்டியவை.
அவுஸ்திரேலியாவுக்கு மீளச் செலுத்திய 2.5 Million USD பணம் Hackers ஊடாக வேறு கணக்குகளுக்கு சென்றது என்பது அலட்சியத்தின் உச்சம்.
வழமையாக கடன் மீளச் செலுத்தும் செயல்முறையை மத்திய வங்கியே மேற்கொண்டு வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னரே, கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் பொறுப்பு மத்திய வங்கியிடமிருந்து நீக்கப்பட்டு, நிதி அமைச்சிடம் (MOF) சட்ட திருத்தங்கள் மூலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த குறிப்பிட்ட பரிவர்த்தனைக்கு நிதி அமைச்சே முழுப் பொறுப்பாகும்.
மத்திய வங்கி இந்தப் பரிவர்த்தனை தொடர்பாக ஏற்கனவே தனது கவலையை வெளியிட்டிருந்தது. இந்த கொடுக்கல் வாங்கலில் உள்ள சிக்கல்களை அடையாளம் கண்டு, அது குறித்து நிதி அமைச்சிற்கு முன்கூட்டியே எச்சரிக்கை (Flagged) விடுத்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகின்றன.
அந்த எச்சரிக்கைகளை புறக்கணித்துவிட்டு (Ignored), மத்திய வங்கி தடுத்தும் கேட்காமல், நிதி அமைச்சு தன்னிச்சையாகச் செயல்பட்டதே தற்போதைய சிக்கலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
என்னதான் அரசாங்க Systemகளில் Cyber Securityஐ Improve பண்ண வேண்டும் என்பது பிரதான வேலைத்திட்டமாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்கு முன் அரச அதிகாரிகளின் தகவல் தொழில்நுட்ப அறிவு, தரவுகளை பாதுகாத்தல் சம்மந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாரிய வேலைத்திட்டமொன்று அவசியம்.
#ziyadaia



