2009 ஆம் ஆண்டு 15,000 ரூபா லஞ்சமாக பெற்ற அதிகாரிக்கு இப்போது தண்டனை – அபராதம் மற்றும் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) கூற்றுப்படி, லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக Labour officer ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனையானது செப்டம்பர் 02, 2009 அன்று பெறப்பட்ட லஞ்ச சம்பவம் தொடர்பான புகாரைத் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளவாயவில் உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரிடம் 2009 ஆம் ஆண்டு 15,000 ரூபாயை லஞ்சமாகக் கோரியது மற்றும் பெற்றுக் கொண்டது தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளில் பிரதிவாதி குற்றவாளி எனத் தீர்மானித்த கொழும்பு மேல் நீதிமன்றம், கடந்த வியாழக்கிழமை (23) இந்தத் தீர்ப்பை வழங்கியது.
ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்குமாறும், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 5,000 ரூபாய் அபராதமும் நீதிமன்றம் விதித்nkதது. அத்துடன், லஞ்சமாகப் பெறப்பட்ட தொகைக்கு இணையான மேலதிக அபராதத்தையும் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது.



