News

1. ஹஜ் பெருநாளில் உழ்ஹிய்யா தடைசெய்யப்பட்டதா?

✍🏻 ஹுஸ்னி ஜாபிர்

1. ஹஜ் பெருநாளில் உழ்ஹிய்யா தடைசெய்யப்பட்டதா?

வழக்கமாக வெசாக் வாரத்தில் இரண்டு நாட்கள் (வெசாக் தினமும் அதற்கு அடுத்த தினமும்) இறைச்சிக்காக விலங்குகளை அறுப்பதற்கு தடை இருக்கும். ஏனைய நாட்களில் அவற்றை அறுக்கலாம். இந்தத் தடவையும் இதுவரை அப்படித்தான் நகர்கிறது. இந்தத் தடவை ஈஸ்டர் விசாரணைக்கு பயந்து மீள உயிர்ப்பு பெற்றுள்ள இனவாத அணி, எப்படியாவது ஹஜ்ஜுப் பெருநாளை குழப்ப முயற்சிக்கலாம் என்பதால் அரசாங்கம் உசாராக இருக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை வைக்கலாம். ஆனால் அரசு ஏற்கெனவே உழ்ஹிய்யாவை தடை செய்துவிட்டது என்ற கோணத்தில் இதை அணுக வேண்டிய அவசியம் இல்லை.

2. கலண்டரில் மே 1ம் திகதி வெசாக் என்று இருக்கும்போது மே27 முதல் வெசாக் வாரம் அறிவிக்கப்பட்டது ஏன்?

வழக்கமாக மாதத்தின் முதல் பூரணை தினம் அந்த மாதத்துக்கு உரிய போயா தினமாக அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்தத்தடவையும் அரசாங்கம் மே முதலாம் திகதி வெசாக் போயா என்று அறிவித்தது. அதை ஏற்று, கலண்டர்களும் அச்சுக்குப் போன பின்னர், மஹா சங்கத்தினர் வெசாக் தினம் பற்றி ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள்.

வெசாக் கொண்டாட்டத்தில் சந்திரன் வைசாக நட்சத்திரத்தில் இருக்க வேண்டும். வழக்கமாக மே மாத பூரணை தினத்தில் அப்படித்தான் அமையும். ஆனால் இந்தத்தடவை பூரணை 1ம் திகதியும் வைசாக நட்சத்திரம் 2ம் திகதியும் வரும். அதற்காக தேய்பிறையில் வெசாக் கொண்டாட முடியாது. எனவே அடுத்த பூரணையை அண்மித்து தான் வெசாக் கொண்டாட வேண்டும். அடுத்த பூரணை மே 31ம் திகதி வருகிறது. அது கூட வைசாக நட்சத்திரத்தில் வரவில்லை. ஆனால் மே 30ம் திகதி வைசாக நட்சத்திரம். எனவே பூரணைக்கு முன்னர், வளர்பிறை இருக்கும்போது மே 30ம் திகதி வெசாக் கொண்டாட்டம் நடைபெற வேண்டும்.

இதுதான் மஹா சங்கத்தின் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை அவர்கள் விடுக்கும்போது அவர்களுக்கு ஹஜ் பெருநாள் திகதிகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. (ஜனவரியில் இது பற்றி செய்திகளில் அறிவித்தபோது நம்மவர்களே ஹஜ் பெருநாள் திகதி பற்றி யோசித்து இருக்க மாட்டார்கள்)

மகாசங்கத்தின் கோரிக்கைபடி வெசாக் கொண்டாட்டம் மே 1ம் திகதிக்குப் பதிலாக அதற்கு அடுத்த பூரணைக்யான மே 31ஆம் லாகதிக்கு முந்திய தினம் மே 30ம் திகதியில் கொண்டாடுவதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுபடிதான் அனைத்தும் நடக்கின்றது.

✍🏻 ஹுஸ்னி ஜாபிர்
🌏 7°11′ 80°06′
⏳ 202604252054 (+0530)

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button