News
அமைதிப் பேச்சு நடத்த அமெரிக்க பிரதிநிதிகளின் இஸ்லாமாபாத் பயணத்தை இரத்துச் செய்து விட்டதாக ட்ரம்ப் அறிவித்த்தார்

அமைதிப் பேச்சு நடத்த அமெரிக்க பிரதிநிதிகளின் இஸ்லாமாபாத் பயணத்தை இரத்துச் செய்து ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷல்’ பக்கத்தில், “ஈரானியர்களைச் சந்திப்பதற்காக பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்குச் செல்லவிருந்த எனது பிரதிநிதிகளின் பயணத்தை நான் ரத்து செய்துவிட்டேன்.
பயணத்திலேயே அதிக நேரம் வீணாகிறது, அதிக வேலை… ஈரானிய தலைவர்கள் யார் பொறுப்பில் இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.
மேலும், எல்லா அதிகாரமும் எங்களிடம்தான் உள்ளது, அவர்களிடம் எதுவும் இல்லை! அவர்கள் பேச விரும்பினால், எங்களை அழைத்தால் மட்டும் போதும்” என்று ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.



