News

அமெரிக்கவின் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவம்

வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற இரவு விருந்து (White House Correspondents’ Dinner) துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர், கலிபோர்னியாவின் டொரன்ஸைச் சேர்ந்த 31 வயது கோல் தாமஸ் ஆலன் (Cole Tomas Allen) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கருதப்படும் நபர் என்றும், அவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார் என்றும் நம்பப்படுகிறது.

பாதுகாப்பு சோதனையிடப்படாத ஒரு பின்புற அறையில் நீண்ட தூர ஆயுதம் ஒன்றை ஒருங்கிணைத்து, பின்னர்  magnetometer சோதனைப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தின் போது சட்ட அமலாக்க அதிகாரி ஒருவர் அணிந்திருந்த பாதுகாப்பு உடையில் (vest) குண்டு பாய்ந்தது.

டிரம்ப், மெலனியா மற்றும்  அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் அவ்வளவு நெருக்கமாக எப்படி சென்றார் என்ற கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.
.
இந்நிலையில் வைட் ஹவுஸ் நிருபர்கள் சங்க இரவு விருந்து துப்பாக்கிச் சூடு மிரட்டலைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகளை அடுத்து வைட் ஹவுஸிலேயே புதிய அரங்கம் (ballroom) கட்டும் தனது திட்டத்தை நியாயப்படுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திக்கொண்டார்.  இந்த முன்மொழிவு ஏற்கனவே நீதிமன்றத்தில் சவால்களை எதிர்கொண்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button