News

2000, மற்றும் ஐயாயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்களுடன் 7 பேர் கைது

நேற்று மேற்கொள்ளப்பட்ட இரண்டு வெவ்வேறு பொலிஸ் சோதனைகளின் போது, கள்ள நோட்டுகள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


முதலாவது சோதனையில், கிடைத்த தகவலுக்கு அமைவாக கல்கிசை பிராந்திய குற்றப்பலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் ரத்மலானை மற்றும் இம்புல்கொட பகுதிகளில் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டனர். இதன்போது 91 கிராம் 200 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், இரண்டு 5,000 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் 21 இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளுடன் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


25, 29, 30, 32, 35 மற்றும் 52 வயதுடைய இந்த சந்தேக நபர்கள் இம்புல்கொட, தெஹிபிட்டிய, பெலெந்த மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். மேலதிக நடவடிக்கைக்காக அவர்கள் கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


அதே இரவு மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சோதனையில், கோஹுவல பொலிஸார் தெஹிவளை பகுதியில் 56 வயதுடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து ஐந்து 5,000 ரூபாய் கள்ள நோட்டுகளும் 38 இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளும் மீட்கப்பட்டன. இவர் வெள்ளவத்தைப் பகுதியைச் சேர்ந்தவராவார்.


இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button