News

Video > போதைப் பொருளுடன் பெளத்த துறவிகள் கைதான சம்பவத்தின் பின்னணியில் அரசாங்கமும் JVP உறுப்பினர்களும் இருக்கக்கூடும் – பிக்குகளுக்கு போதைப்பொருட்களைப் பழக்குவது ஜே.வி.பி உறுப்பினர்களே என பலாங்கொடை கஸ்ஸப தேரர்தெரிவிப்பு

தாய்லாந்தில் இருந்து வந்து கைது செய்யப்பட்ட பிக்குகள் தொடர்பான சம்பவத்தின் பின்னணியில் அரசாங்கமும் ஜே.வி.பி (JVP) உறுப்பினர்களும் இருப்பதாக சந்தேகிப்பதாக கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.


“தாய்லாந்தில் இவை தடைசெய்யப்படவில்லை.

மொட்டை அடித்து சிவுரு அணிவித்து போதைப்பொருட்களை அனுப்பியது அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களோ என இப்போது எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.


தொடர்ந்து கருத்து தெரிவித்த கஸ்ஸப தேரர், “பிக்குகளுக்கு போதைப்பொருட்களைப் பழக்குவது ஜே.வி.பி உறுப்பினர்களே. இது அவர்களைச் சிக்கவைப்பதற்காகச் செய்யப்பட்ட ஒன்றாகவும் இருக்கலாம்” எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.

https://youtu.be/jdV_SZeD-eU?si=EpmYMfMNqAntDz1F

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button