News

மக்காவில் பாக்கியம் நிறைந்த முதல் மரணம் பதிவு

✍️ மக்காவில் பாக்கியம் நிறைந்த முதல் மரணம் பதிவு

2026ம் ஆண்டு இலங்கை சாய்ந்தமருது முல்தஸம் ஹஜ் ட்ரவல்ஸ் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட ஹாஜிகளில் பொத்துவிலைச் சேர்ந்த ஆதம்கண்டு அப்துர் ரவூப் காலமானர்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

2026.05.01 வெள்ளிக்கிழமை இரவு இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்ற ஹஜ் குழுவில் இவர் பயணித்தார். 2026.05.03 ஞாயிற்றுக்கிழமை தஹஜ்ஜுத் தொழுதுவிட்டு சுபஹ் தொழுகைக்காக காத்திருந்தபோது புனித கஃபாவிற்கு அருகாமையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இஹ்ராம் உடையுடன் இறையில்லாமான கஃபாவின் அருகாமையில் இறையழைப்பை ஏற்றுக்கொண்ட மர்ஹூம் அப்துர் ரவூப் அவர்களின் புனித மறைவு மிகப்பெரும் பாக்கியமாகும். ஜானாஸா நல்லடக்க ஏற்பாடுகள் மக்காவில் இடம்பெறுவதோடு, நபிகள் நாயகம் சல்லள்ளாஹு அலைஹி வசல்லம் அன்னவர்களின் ஆசிர்வாதம் பெற்ற சுவன மையவாடியான “ஜன்னத்துல் முஅல்லா” வில் ஜனாஸா நல்லடக்கம் இடம்பெறும்.

இது பல்லாயிரம் சஹாபாக்கள் அடக்கம் செய்யப்பட்ட மையவாடியாகும். “இந்த இடத்தில் மரணித்து நல்லடக்கம் செய்யப்படுபவர்களுக்கு நிச்சயமாக நான் ஷபாஅத்து செய்வேன்” என நபிகள் நாயகம் சல்லள்ளாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் வாக்களித்துள்ளார்கள்.

எல்லாம்வல்ல இறைவன் அன்னாரது நன்மைகளை ஏற்று, பாவங்களை மன்னித்து, ஹஜ்ஜுடைய கூலியை வழங்கி, நாளை மஹ்ஷரில் இஹ்ராம் ஆடையுடன் தல்பிய்யா கூறியவராக எழுப்பி, நபிகள் நாயகம் சல்லள்ளாஹு அலைஹி வசல்லம் அன்னவர்களின் ஷபாஅத்தை வழங்கி, அவர்களுக்கு அருகாமையில் ஜன்னத்துல் பிர்தௌஸில் வாழவைப்பானாக! அன்னாருடைய குடும்பத்தவர்களுக்கு மன ஆறுதலையும் நிம்மதியையும் வழங்குவானாக! ஆமீன் (2026.05.03)
Report: Mohamed Naleem from Saudi Arabia

Dharussafa Sri Lanka

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button