அல் குர்ஆனையும் இஸ்லாம் மதத்தையும் அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட ஞானசார தேரரை மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது திருக்குர்ஆனையும் இஸ்லாம் மதத்தையும் அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று (6) கோட்டை நீதவானுக்கு அறிவித்தனர்.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலதிக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்து குறிப்பிட்டுள்ளனர்.
ஞானசார தேரரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்ததுடன், அறிவித்தல் (Notice) கிடைத்தவுடன் மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதவான் அவருக்கு உத்தரவிட்டார்



