தமிழக அரசியலில் ட்விஸ்ட்டா? திமுக – அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கத் தயராவதாக ஒரு தகவல் பரபரக்கிறது.
தவெக, ஆட்சி அமைக்க உரிமை கோரி வரும் நிலையில், தமிழக அரசியலில் மிகப்பெரிய ட்விஸ்ட்டாக ஒரு தகவல் சிறகடித்துப் பறக்கிறது. திமுக – அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கத் தயராவதாக ஒரு தகவல் பரபரக்கிறது. இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர்கள் சிலரும் பேசியுள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனித்து 108 இடங்களில் வென்றுள்ளது. எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தவெக தனிப்பெரும் கட்சியாக வென்றிருப்பதன் மூலம், அக்கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. மேலும் 2 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசமும் தவெக கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியாக 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணியாக 53 தொகுதிகளிலும் வென்றுள்ளன
விஜயின் தவெக முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.
தவெகவிற்கு ஆட்ச்சி அமைக்க 118 பேர் தேவை என்ற நிலையில் 107 எம்எல்ஏக்களே உள்ளனர் . தவெகவிற்கு மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தற்போது தவெகவுக்கு கிடைத்துள்ளது.
இந்தச் சூழலில் தான் தமிழக அரசியலில் மிகப்பெரிய ட்விஸ்ட்டாக ஒரு தகவல் சிறகடித்துப் பறக்கிறது. திமுக – அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கத் தயராவதாக ஒரு தகவல் அரசியல் அரங்கில் பரபரக்கிறது. இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர்கள் சிலரும் பேசியுள்ளது பெரும் பரபரப்பு நெருப்பைப் பற்ற வைத்துள்ளது.
DONT. DO. THIS pic.twitter.com/kAjsJDojMm
— RadhakrishnanRK, PhD. (@RKRadhakrishn) May 6, 2026
மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே என்கிற ராதாகிருஷ்ணன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் பேசுகையில், “இதை செய்யாதீங்க.. இது மிக மிகப்பெரிய தவறு. நான் கேட்கும் சில செய்திகள் எனக்கே பயங்கர அதிர்ச்சி தரும் அளவுக்கு இருக்கிறது.
நான் அரசியல்வாதி இல்லை என்றாலும் கூட எனது 40 வருட பத்திரிகையாளர் வாழ்க்கையில் அரசியலில் பலவற்றைப் பார்த்துவிட்டேன். எனினும், இது மட்டும் நடக்கக்கூடாது. நான் கேள்விப்படுவது வெறும் வதந்தியாகவே மறைந்துவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
What we are hearing is real crazy stuff. Hope it is not true.
— Sumanth Raman (@sumanthraman) May 6, 2026
மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சுமந்த் ராமன், “நாங்கள் கேள்விப்படுபவை மிகவும் வேடிக்கையான விஷயங்கள். அது உண்மையாக இருக்காது என்று நம்புகிறோம்.” என தமது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவரும், திமுக – அதிமுக கூட்டணியாக இணைந்து ஆட்சியமைக்கப்போவதாக பரவும் தகவல் குறித்து மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.
நன்றி : one india
Thats tamil
இருந்த போதிலும் அதிமுக – திமுக கூட்டணி தொடர்பாக எந்த வித அதிகார்வபூர்வ தகவலும் இன்னும் வர வில்லை என்பது குறிப்பிடத்தக்கது



