News

பொலிஸ் நிதியிலிருந்து 35 இலட்சம் ரூபா பணத்தை திருடிய பொலிஸ்காரர் ஒருவர் பொலிஸாரால் கைது  #இலங்கை

பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



கல்கிசை தலைமையக பொலிஸ் நிலையத்தின் கொடுப்பனவுப் பிரிவில் பணத்திற்குப் பொறுப்பாகக் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.



இவர் பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து 3,540,415 ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



சந்தேக நபருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.



பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவின் மேற்பார்வையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடித்துவக்குவின் ஆலோசனையின் கீழ், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் ஆரியவன்ச இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button