News
தற்போதும் கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் வாரத்திற்கு 1,700 பேர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர் ; WHO தலைவர் தெரிவிப்பு
கொவிட் வைரஸின் தீவிரம் குறைந்துள்ள போதிலும், அது இன்னும் உலகிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதும் உலகம் முழுவதும் ஒரு வாரத்தில் 1,700 பேர் கொவிட் தொற்றால் இறப்பதாக அவர் தெரிவித்தார்.
பல நாடுகளில் கொவிட் வைரஸுக்கு எதிராக நோய்த்தடுப்பு மருந்துகளைப் பெறுவதில் குறைந்த போக்கு காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், வைரஸைத் தொடர்ந்து பலவீனப்படுத்தத் தடுப்பூசிகளைப் பெறுவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.