News
அலகுகள் 180 இற்கும் அதிகமானால் மின்சாரக் கட்டணம் 18 சதவீதத்தால் உயர்வு.

வீட்டுப் பிரிவில் மாதாந்த மின்சார நுகர்வு 180 அலகுகளுக்கு (Units) அதிகமாக இருந்தால், மின்சாரக் கட்டணம் 18 சதவீதத்தால் (18%) அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தவிசாளர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் சற்று முன்னர் அறிவித்தார்.
எவ்வாறாயினும், மாதாந்த மின்சார நுகர்வு 180 அலகுகளுக்கும் குறைவாகக் காணப்படும் நுகர்வோரின் மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது எனவும் தவிசாளர் மேலும் குறிப்பிட்டார்.


