News

நாளை பிற்பகல் 3.15 மணிக்கு
விஜய் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்

நாளை பிற்பகல் 3.15 மணிக்கு தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்க உள்ளார். விஜய்யுடன் சேர்ந்து 10 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய்க்கு பெரும்பான்மை கிடைத்த நிலையில் ஆளுநர் அர்லேகரை 4-வது முறையாக சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்த சந்திப்பின் போது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த செல்வப்பெருந்தகை, பெ சண்முகம் உள்ளிட்டோரும் விஜய்யுடன் வந்திருந்தனர். பெரும்பான்மையை காட்டியுள்ளதால் இன்று இரவே விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது

இதனால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நாளை பிற்பகல் 3.15 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், விழா அரங்கில் இருக்கைகள், விளக்குகள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

விஜயுடன் நாளை செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ்மோகன், சத்தியபாமா, ஜேசிடி பிரபாகர், வெங்கட்ரமணன் ஆகிய 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button