News

தற்போது இடம்பெறும் பணமோசடி வழக்கு விசாரணை… ‘நான் குற்றவாளி அல்ல’ என யோஷித ராஜபக்ஷ குற்றவாளிக் கூண்டிலிருந்து தெரிவித்தார்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை முன்னெடுத்துச் செல்ல முடியாது என பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (14) நிராகரித்தது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

தீர்ப்பை அறிவித்த நீதிபதி, இந்த வழக்கில் பிரதிவாதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ‘சதித் திட்டம்’ என்ற குற்றச்சாட்டினை முன்னெடுத்துச் செல்ல முடியாது என பிரதிவாதி தரப்பு முன்வைத்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனை அடிப்படையற்றது எனக் குறிப்பிட்டார்.

அதன்படி, குறித்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை நிராகரிப்பதாகத் தெரிவித்த நீதிபதி, பிரதிவாதிக்கு எதிரான அக்குற்றச்சாட்டினைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் எவ்விதத் தடையுமில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து, பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷவுக்கு பகிரங்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசித்துக் காட்டப்பட்டது.

அப்போது, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தான் குற்றவாளி அல்ல என யோஷித ராஜபக்ஷ கூண்டிலிருந்து தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button