News

VIDEO > பசில் ராஜபக்ஷவின் வீடு என கூறப்படும், மல்வானை 15 ஏக்கர் நிலப்பரப்புடன் காணப்படும் வீட்டை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுற்றி வளைத்தது

உரிமையாளர் எவருமற்றதாகக் கருதப்படும் மல்வானையில் அமைந்துள்ள நிலம் மற்றும் வீடு உள்ளிட்ட சொத்துக்களை பல்கலைக்கழகங்கள் உட்பட பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்குமாறு கோரி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (14) போராட்டமொன்றை முன்னெடுத்தது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது ‘மக்களிடமிருந்து திருடப்பட்ட சொத்துக்கள் மீண்டும் மக்களுக்கே வழங்கப்படும்’ என அளித்த வாக்குறுதியை நினைவூட்டி அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, இடவசதி குறைந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குறித்த சொத்துக்களை வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதுடன், இதற்கு உரிமையாளர் எவரும் இல்லாத காரணத்தினால் இது நீதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்த வீட்டிற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பசில் ராஜபக்ச தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்த நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர், குறித்த வீட்டை மற்றும் நிலத்தை ஏலத்தில் விடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரகல போராட்டக் காலத்தில் ஒரு குழுவினரால் இந்த வீட்டிற்குத் தீ வைக்கப்பட்டிருந்ததுடன், தீ விபத்தினால் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்தது.

அதன்பின்னர், இந்த வீட்டில் சர்வதேச நீதிபதிகள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமொன்றை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அது நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே, உரிமையாளர் எவருமற்ற இந்த வீட்டைத் தமக்கு வழங்குமாறு அந்தர் பல்கலைக்கழக மாணவர் பலமண்டலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. Video https://youtu.be/3bkM3gERfh8

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button