அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சி – விற்பனை விலை 330 ரூபாயாக அதிகரித்தது

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (14) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், சில வங்கிகளில் விற்பனை விலை 330 ரூபாயாக அதிகரித்துள்ளது.
செய்லான் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே 318.25 ரூபாயிலிருந்து 321.75 ரூபாயாகவும் மற்றும் 326.50 ரூபாயிலிருந்து 330.50 ரூபாயாகவும் அதிகரித்துள்ளன.
என்.டி.பி (NDB) வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே 320.50 ரூபாயிலிருந்து 323.25 ரூபாயாகவும் மற்றும் 327 ரூபாயிலிருந்து 329.75 ரூபாயாகவும் அதிகரித்துள்ளன.
மக்கள் வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் 320.27 ரூபாயிலிருந்து 323.73 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், விற்பனை விகிதமும் 327.33 ரூபாயிலிருந்து 330.87 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், கொமர்ஷல் வங்கியில் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே 318.76 ரூபாயிலிருந்து 321.24 ரூபாயாகவும் மற்றும் 327.25 ரூபாயிலிருந்து 329.75 ரூபாயாகவும் அதிகரித்துள்ளன.
சம்பத் வங்கியில், கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே 320.75 ரூபாயிலிருந்து 324.25 ரூபாயாகவும் மற்றும் 327.25 ரூபாயிலிருந்து 330.75 ரூபாயாகவும் அதிகரித்துள்ளன.



