News
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிய தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு 6 ஆண்டுகள் சிறையும் 30 இலட்சம் ரூபா அபராதமும்..

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலகவுக்கு உயர் நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறையும் 30 இலட்சம் ரூபா அபராதமும் விதித்துள்ளது.
அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் மேலதிகமாக ஒரு வருடம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது



