News

பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் தடம்புரண்டு கவிழ்ந்ததில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

இன்று (16) களனி மற்றும் வனவாஹல புகையிரத நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட புகையிரத விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொலிஸாரின் கூற்றுப்படி, காயமடைந்த பயணிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பிரதான பாதையிலான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், புகையிரத பெட்டிகளில் ஒன்று தண்டவாளத்தில் கவிழ்ந்ததில் ஒரு பாதை முற்றாக முடக்கப்பட்டுள்ளது.


குறித்த புகையிரதம் பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button