VIDEO > இன்று காலை இடம்பெற்ற புகையிரத விபத்தின் பின்னணியில் நாசகாரர்களின் சதியா? தண்டவாளத்தின் சில பகுதிகள் கழற்றப்பட்டு சேதமாக்கப் பட்டுள்ளது அம்பலமாகிறது

வனவாசல பகுதியில் இன்று இடம்பெற்ற புகையிரத விபத்து தொடர்பில் தற்போது சில விசேட அவதானிப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
புகையிரதம் தடம் புரண்ட இடத்தில் உள்ள மோட்டார் பாயிண்ட் (தண்டவாளம் மாறும் இடம்) கம்பிகள் (Rods), புகையிரதம் வருவதற்கு முன்னர் யாரோ ஒரு நபரால் அல்லது குழுவினரால் கழற்றப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த விபத்தானது புகையிரத பாதையில் உள்ள குறைபாடு, புகையிரத பெட்டியின் கோளாறு அல்லது புகையிரதத்தின் வேகம் காரணமாக ஏற்பட்டதொன்றல்ல என தற்போதைய அவதானிப்புகள் மூலம் முடிவெடுக்க முடியும்.
இது ஒரு வகையான சதிச்செயல் என சந்தேகிக்கப்படுவதால், இதன் மேலதிக உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்கும் மற்றும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீடியோ பார்க்க > https://www.facebook.com/share/v/1GREC7si1d/



