News

இந்தக் கடினமான காலப்பகுதிக்குப் பின்னர், நாட்டின் பொருளாதாரம் மிக விரைவில் சாதகமான நிலைக்கு மாறும்

உலகளாவிய ரீதியில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்நாட்டின் வெளிநாட்டு நாணய மாற்று அதாவது டொலர் கையிருப்புகளை ஸ்திரப்படுத்துவதற்காக வாகன இறக்குமதி வரிகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

தற்போதைய உலகளாவிய சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாட்டின் உள்நாட்டு நிதி நிர்வாகத்தை முறையாக மேற்கொள்வதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம் வாகனங்களுக்கான இறக்குமதி வரி அளவு கணிசமான மட்டத்தில் அதிகரித்துள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.

இந்தத் தீர்மானம் மக்களுக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தாது என வலியுறுத்திய அமைச்சர், இது ஒரு குறுகிய காலத்திற்கு மாத்திரமே பாதிக்கக்கூடிய ஒரு நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.

இந்தக் கடினமான காலப்பகுதிக்குப் பின்னர், நாட்டின் பொருளாதாரம் மிக விரைவில் சாதகமான நிலைக்கு மாறும் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

Recent Articles

Back to top button