News

அரசாங்கம் எப்படியோ என்று தெரியாது… ஆனால் மக்கள் அமைதியாகவும், நல்லிணக்கமாகவும் உள்ளார்கள் – அரசியல் பற்றி பேச விரும்பவில்லை ; மகிந்த

(இராஜதுரை ஹஷான்)

யுத்த வெற்றியை கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்த தினத்தை ஒருபோதும் மறக்ககூடாது. இன்று பிளவுபடாத ஒரே நாடாக உள்ளதையிட்டு மகிழ்ச்சியடைய வேண்டும். மக்கள் அமைதியாகவும் நல்லிணக்கமாகவும் உள்ளார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் ஏற்பாடு செய்த, இராணுவத்தினரை கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பில் திங்கட்கிழமை (18) நடைபெற்றது.

இந்நிழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

யுத்தம் முடிவடைந்த இந்த தினத்தை கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். நாட்டை பாதுகாத்த இராணுவத்தினர் கௌரவிக்கப்பட வேண்டும். யுத்த வெற்றி நாளை ஒருபோதும் மறக்கக்கூடாது. இன்று இலங்கை பிளவுபடாத ஒரே நாடாக உள்ளதையிட்டு மகிழ்ச்சியடைய வேண்டும்.

அரசாங்கம் எப்படியோ என்று தெரியாது. ஆனால் மக்கள் நல்லிணக்கமாக உள்ளார்கள். அரசியல் பற்றி பேச விரும்பவில்லை. யுத்த வெற்றிக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்கள் என்றும் நினைவுகூரப்படவேண்டும். அவர்களால் தான் இன்று நாடு ஐக்கியமாக உள்ளது. இது பாரியதொரு வெற்றியாகும் என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button