News
“அரசாங்கம் ஒரு வருடத்தில் கிராமத்தின் வறுமையைக் குறைத்தது…” – கொட்டஹச்சி…
2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026 ஆம் ஆண்டளவில் கிராமப்புற வறுமையைக் குறைப்பதில் அரசாங்கம் வெற்றியடைந்துள்ளதாக ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சி தெரிவித்துள்ளார்.
மக்களின் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தி, மக்கள் எதிர்பார்த்த வளமான நாட்டை உருவாக்குவதற்காக அரசாங்கம் ‘பிரஜா சக்தி’ (சமூக சக்தி) திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பொருளாதாரத்தை வலுவூட்டும் அதேவேளை, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை தரரீதியாக வளப்படுத்துவதும் அரசாங்கத்தின் ஒரு நோக்கமாகும் என நிலாந்தி கொட்டஹச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.



