News
வீட்டில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றியதில் என் கணவரை கொன்றுவிட்டேன் என மனைவி பொலிஸாரிடம் தெரிவித்த சம்பவம் இன்று காலை பதிவு #இலங்கை

ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரம்பகந்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (7 ஜூன் 2026) அதிகாலை வேளையில் தனது கணவரை குத்திக் கொலை செய்தமை தொடர்பில் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குடும்பத் தகராறின் போது வீட்டின் உள்ளே கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில், அரம்பகந்த பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த வீட்டில் இடம்பெற்ற வாக்குவாதத்தின் போது, சந்தேக நபரான உயிரிழந்தவரின் மனைவி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹொரணை பொலிஸாரால் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


