மத்திய மாகாண மட்டத்தில் இடம்பெற்ற ரக்பி சுற்றுப்போட்டியில் மடவளை மதீனா அணி சாம்பியன் கேடயத்தை கைப்பற்றியது ❤️
மத்திய மாகாண மட்டத்தில் இடம்பெற்ற ரக்பி சுற்றுப்போட்டியில் மடவளை மதீனா அணி சாம்பியன் கேடயத்தை கைப்பற்றியது ❤️
மத்திய மாகாண ரக்பி நடுவர்களின் சங்கம் மற்றும் மத்திய மாகாண ரக்பி சம்மேளனம் இணைந்து நடாத்திய ரக்பி சுற்றுப்போட்டி பல்லேகல திரித்துவக் கல்லூரி மைதானத்தில் இன்று (14) இடம் பெற்றது.
மொத்தமாக 14 பாடசாலை அணிகள் இதில் கலந்து கொண்டன.
4 குழுக்களாக இடம்பெற்ற இச் சுற்றுப்போட்டியில் ஷீல்ட் கிண்ண அரை இறுதிப் போட்டியில் மடவளை மதீனா தேசிய பாடசாலை அணி தலாதுஓய கல்லூரியுடன் 31-7 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேரியது. இறுதிப்போட்டியில் நுகவெல மத்திய கல்லூரியுடன் மோதிய மதீனா கல்லூரி அணி 29-7 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று இச்சுற்றுப்போட்டியின் ஷீல்ட் சாம்பியன்களாக தெரிவானது.
மடவளை மதீனா அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் – மதீனா ரக்பி அணிக்கு முன்னால் கண்டி கிங்ஸ்வூட் பாடசாலை ரக்பி வீரர், மடவளையை சேர்ந்த நஸ்ரி முகம்மத் பயிற்சியாளராக செய்ற்பட்டு வருவதுடன் அவரின் சிறப்பான பயிற்றுவிப்பு மூலம் மதீனா கல்லூரி அணியானது பல வெற்றிகளை சுவைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
MIC Sir Nasmi Ahmed
Coach Nazry Mohamed