“நாங்கள் தொடர்ந்து அரசாங்கத்தில் இருக்கப்போகிறோம் என்று நினைத்துக்கொண்டே செயலாற்றுகிறோம்…”
தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் உறுதியுடன் செயலாற்றி வருவதாக விவசாய, காணி, நீர்ப்பாசன மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
“நாங்கள் தொடர்ந்து ஆட்சியில் இருப்போம் என்ற உறுதியில் இருக்கிறோம். இப்போது நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்துள்ளோம், அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை ரத்து செய்துள்ளோம், நாடாளுமன்றத்தில் 125 ரூபாய்க்கு வழங்கப்பட்ட உணவை 2000 ரூபாயாக மாற்றியுள்ளோம். முன்னரெல்லாம் வெறும் 125 ரூபாய்க்கு நாள் முழுவதும் சாப்பிட்டார்கள். அதில் ஒரு கெட்ட விஷயமும் இருக்கிறது, அதை நிமல் சிறிபால போன்ற ஒரு அமைச்சரைப் பார்க்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது.
நாங்கள் ஆட்சிக்கு வரும்போது இரண்டு ஹெக்டேயருக்கான உர மானியம் 30,000 ரூபாயாக இருந்தது. இப்போது நாங்கள் 60,000 ரூபாய் வழங்குகிறோம். சிலர் ஆங்காங்கே உர விலை அதிகம் என்று கூறுகிறார்கள். உண்மைதான், விலை அதிகம் தான். உலகளாவிய சூழ்நிலைகளுடன் அவை அதிகரிக்கின்றன. ஆனால், அந்த முப்பதாயிரத்தை அறுபதாயிரமாக மாற்றியது யாருக்கும் தெரிவதில்லை. எது தெரிகிறது? இந்த யுத்தச் சூழ்நிலைக்கு மத்தியில் உர விலை அதிகரித்தது மட்டுமே.”
தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் ஊழியர்கள் குழுவொன்றுக்கு புதிய நியமனங்களை வழங்கும் முகமாக நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே லால் காந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

