பிரிவினையின் விலையையும் சமரசத்தின் மதிப்பையும் இலங்கை அறிந்துள்ளது. அமைதி என்பது வெறுமனே போர் இல்லாத நிலை மட்டுமல்ல, அது நம்பிக்கை, கண்ணியம், வாய்ப்பு மற்றும் நமது பிள்ளைகள் ஒரு சிறந்த எதிர்காலத்தை மரபுரிமையாகப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையின் இருப்பு ஆகும் – அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தை வரவேற்று சஜித் பதிவு

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் உடன்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வரவேற்றுள்ளார், அத்துடன் மனிதகுலத்தின் மிகப் பெரிய பலமாக பேச்சுவார்த்தை விளங்குவதை இது நினைவூட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“பிரிவினையின் விலையையும் சமரசத்தின் மதிப்பையும் இலங்கை அறிந்துள்ளது. அமைதி என்பது வெறுமனே போர் இல்லாத நிலை மட்டுமல்ல, அது நம்பிக்கை, கண்ணியம், வாய்ப்பு மற்றும் நமது பிள்ளைகள் ஒரு சிறந்த எதிர்காலத்தை மரபுரிமையாகப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையின் இருப்பு ஆகும்,” என்று அவர் ‘X’ தளத்தில் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
உலக மக்கள் அதற்கு குறைவான எதற்கும் தகுதியானவர்கள் அல்லர் என்று குறிப்பிட்ட அவர், “அமைதி நிலவட்டும்” என்றும் தெரிவித்தார்.
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையை நீக்குவது உட்பட, தெஹ்ரானுடன் வாஷிங்டன் ஓர் உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததை அடுத்தே அவரது இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் பல மாதங்களாக தீவிரமடைந்து வந்த பகைமையைத் தொடர்ந்து இந்த திருப்புமுனை ஏற்பட்டுள்ளதுடன், இவர்களை பேச்சுவார்த்தைக்கு தள்ளுவதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்துள்ளது.



