News

ரணில் – அநுர கும்பல் இணைந்து இரவு பகல் பாராது ஐக்கிய மக்கள் சக்தியை தோல்வியடைய செய்ய சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என சஜித் குற்றச்சாட்டு

இன்று மக்கள் தெளிவான முறையில் தீர்மானம் எடுக்கும் நிலையில் இருக்கின்றார்கள். நாட்டை அழிவின் பக்கம் இட்டுச்செல்லும் ரணில் அநுர கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதா? இல்லாவிட்டால் 220 இலட்சம் மக்களையும் ஆட்சி பீடமேற்றும் பொது மக்களின் யுகத்திற்கு மக்கள் வரத்தை வழங்குவதா? என்று மக்கள் தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச தெரிவித்தார்.

இந்நாடு மீண்டும் அபிவிருத்தியை நோக்கிய யுகத்திற்கு செல்வதற்கும் தொழிற்சாலைகள் உருவாகி, தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மக்களின் வறுமை நீங்கி மூலை முடுக்கு, கிராமங்கள், நகரங்கள், விருத்தியடைந்து நாடு அபிவிருத்தி அடைகின்ற வேலைத்திட்டத்திற்கு ரணில் அநுர கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள்.

ரணில் – அநுர கும்பல் இரவு பகல் பாராது ஐக்கிய மக்கள் சக்தியை தோல்வியடைய செய்ய வேண்டும் என்று சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இந்த சூழ்ச்சிக்குள் நாட்டு மக்கள் சிக்கிக் கொள்ள மாட்டார்கள் என்பதை தாம் அறிந்திருக்கிறோம் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 52 ஆவது மக்கள் வெற்றிப்பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (14) திகதி இரத்தினபுரியில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

கட்டுக்கட்டாக பைல்களை தூக்கிச் சென்ற ஒரு குழுவினர் திருடர்களை பிடிப்போம் என்று கூறினாலும், ஐக்கிய சட்டத்தரணிகள் சக்தி உயர்நீதிமன்றத்தை நாடி நாட்டை வங்குரோத்தடையச் செய்த ராஜபக்ஷக்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்து தீர்வைப் பெற்று, அவர்கள் நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகள் என வெளிக்கொணர்ந்தது. செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் இந்தத் தீர்வின் ஊடாக நட்ட ஈட்டை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இரத்தினக்கல் அகழ்வு தொழிலில் ஈடுபடுகின்ற வேலையாட்கள், முதல் இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழில்துறை ஏற்றுமதியாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், வர்த்தக இடைத்தரகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற அனைத்து தரப்பினர்களுக்காகவும் இரத்தினக் கல் மற்றும் ஆபரணங்கள் தேசிய கொள்கை திட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

அத்தோடு 50 கிலோ உரம் ஒரு மூடையை 5000 ரூபாவுக்கு வழங்கி, விவசாயிகளை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் இரத்தினபுரி உள்ளிட்ட இலங்கையில் இரத்தினக் கல் காணப்படுகின்ற இடங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முயற்சி செய்ததது.

அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி அதனை நிறுத்தினோம்.

தோட்டத் தொழிலாளர்களுக்காக செய்ய முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மிகப் பெருமளவில் செய்து, தொழில் வாய்ப்பில்லாத இளைஞர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றி சமூகத்தில் அபிமானத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வீடில்லாதவர்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுப்பதோடு இல்லத்தரசிகளை மையமாகக் கொண்ட வறுமை ஒழிப்பு வேலை திட்டத்தை செயற்படுத்தி, 24 மாதங்களுக்கு 20 ஆயிரம் ரூபா வழங்கி வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button