“மக்கள் குற்றங்களைச் செய்யாவிட்டால் நீதிமன்றம் தேவையில்லை… எங்களது இலக்கு அந்த இடத்தையடைவதே ஆகும்.. – உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சர்”
இலங்கை சமூகம் தற்போது எதிர்நோக்கியுள்ள தீர்க்கமான அரசியல் மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில், நாட்டிற்குள் ஒரு புதிய நல்ல சூழ்நிலையையும் புதிய அரசியல் கலாசாரத்தையும் உருவாக்குவதற்கான பொறுப்பு அரசியல் தலைமைத்துவம், அதிகாரிகள் மற்றும் ஒட்டுமொத்த குடிமக்கள் ஆகிய அனைவருக்கும் உரியதாகி உள்ளது என்று பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் இதனைத் தெரிவித்தது முதற்கட்ட விசாரணை அதிகாரிகள் மற்றும் வழக்கினை நடத்தும் அதிகாரிகளின் குழாமிற்குரிய இரண்டாவது பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்த அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஆகும். இந்நிகழ்வு நாரஹேன்பிட்டியில் உள்ள ‘நிலமெதுர’ நிர்வாகக் கட்டிடத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக மத மற்றும் குடும்ப அமைப்புகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்புகளும் வீழ்ச்சியடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த நிலையை உணர்ந்து அதற்குரிய தகுந்த தீர்வுகளை வழங்குவது இன்றியமையாதது எனக் குறிப்பிட்டார்.
இதன் கீழ், அரசியல் கலாசாரத்தை மாற்றுவதுடன், பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி ஒரு புதிய சமூகத்தை உருவாக்குவதற்கான பொறுப்பில் இருந்து எவரும் விலகிவிட முடியாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அரச சேவையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைத் தடுத்து, அதனைப் பலப்படுத்துவது ஒரு தேசியத் தேவை என்பதை உணர்ந்து, தற்போதைய அரசாங்கம் அரச துறையிலுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான பாரிய வேலைத்திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி வருகிறது. தற்போதைய அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்கும் போது சுமார் நான்கு லட்சம் வெற்றிடங்கள் காணப்பட்டதாகவும், 2017 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் இருந்து இதுவரையில் நிரப்பப்படாமல் இருந்த சில பதவிகள் உட்பட, அகில இலங்கை சேவைகள் மற்றும் ஏனைய அனைத்து சேவைகளிலும் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இங்கு வெளிப்படுத்தினார்.
அமைச்சர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், விசாரணை அதிகாரிகள் தேவைப்படுவதே அதிகமாக விசாரணை செய்வதற்குரிய பிரச்சினைகள் இருப்பதனால்தான் என்றும், இல்லையெனில் அவர்களின் தேவை இந்தளவுக்கு இருக்காது என்றும் குறிப்பிட்டார். எந்தவொரு நாcleanup விசாரணை அதிகாரிகள் இல்லாமலேயே அரச சேவையை முன்னெடுத்துச் செல்ல முடியுமானால், அதுவே சிறந்த நிலையாகும் என்றும், அவ்வாறானதொரு நிலையை நோக்கி நகர்வதே தங்களது இலக்கு என்றும், ஆனால் அதுவரை விசாரணை அதிகாரிகள் அவசியமாக இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
என்றாவது ஒரு நாள் நீதிமன்றங்கள் இல்லாமல் வாழ முடியுமானால்… மனிதர்கள் குற்றங்களைச் செய்வதாலேயே நமக்கு ஒரு நீதிமன்றம் தேவைப்படுகிறது. ஆனால், மனிதர்கள் குற்றங்களில் இருந்து விலகி, மிகவும் அமைதியாகவும் இணக்கமாகவும் வாழ்ந்தால் நீதிமன்றம் ஒன்றின் தேவை இருக்காது என்று குறிப்பிட்ட அவர், தான் இதை ஒரு உதாரணமாகவே கூறியதாகவும் தெரிவித்தார்.
இங்கு தமக்கு விசாரணை அதிகாரிகள் தேவைப்படுவது, இந்த அரச சேவையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சிக்கு மத்தியில், அதனை மீண்டும் கட்டியெழுப்புவதில் ஒரு தேசியத் தேவையாக, அதிகமாக விசாரணை செய்ய வேண்டிய பிரச்சினைகள் இருப்பதனாலேயே ஆகும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரச சேவையை தரமானதாகவும் வலுவானதாகவும் மாற்றுவதற்காக சம்பளத்தை உயர்த்துவதற்கும், புதிய நியமனங்களை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அதே நேரத்தில் அரச சேவையில் நிலவும் முறைகேடுகள், ஊழல் மற்றும் மோசடிகளைத் தடுப்பதன் அவசியத்தையும் இங்கு கடுமையாக வலியுறுத்தினார்.
நாட்டில் சட்டம் முறையாகச் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதைப் பொதுவாக மக்கள் மத்தியில் உணரச் செய்வதன் மூலம், சட்டவிரோதச் செயல்கள் மற்றும் சட்ட மீறல்களை நூறு சதவீதம் நிறுத்த முடியாவிட்டாலும், அவற்றை முடிந்தவரை குறைத்துக் கொள்ள முடியும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன நம்பிக்கை தெரிவித்தார்.



